Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சன்னியாசி பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது

Webdunia
ஞாயிறு, 17 ஜூன் 2018 (17:10 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 சன்னியாசி பெண்களை 4 பேர் மிரட்டி கற்பழித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சத்தீஸ்கர் - சம்பா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு இரண்டு சன்னியாசி பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்களை ஒரு ஆசிரமத்திற்கு அழைத்து செல்ல அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான திலிப்சந்த் படேல் என்பவர் வந்துள்ளார்.
 
ஆனால், ஆசிரமத்திற்கு செல்லாமல் ஒரு குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஏமாற்றி காரை கோர்பா மாவட்டம் செல்லும் வழியில் ஓட்டி சென்று ஓரிடத்தில் காரை நிறுத்தி படேல் உள்பட அவரின் 3 நண்பர்கள் என மொத்தம் 4 பேரும் சன்னியாசிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்துள்ளனர். அதன்பின் இதை வெளியே கூறினால் கொன்று விடுவோம் என மிரட்டியதோடு, சத்தீஸ்கர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சன்னியாசிகளில் ஒருவர் சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கிற்கு இதுபற்றி புகார் அனுப்பினார். எனவே, அந்த 4 பேரின் மீது போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்