Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை தூக்கிவீசிய ஃபானிபுயல் ...வைரலாகும் வீடியோ

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (20:10 IST)
இந்தியாவில் உருவான புயல்களிலேயே அதிக சக்திவாய்ந்த புயலாகவும், அதிக சேதங்களை விளைவித்ததாக இந்த ஃபானிபுயல் உள்ளதாக தேசிய ஊடகங்கள் முழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஃபானி புயலால் ஒடிசா மாநிலம் புரியில் 142 கி.மீ முதல் 174 கி.மீ. வரை காற்று வீசி வருவதாகவும், கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கரையை கடந்ததில்லை என்றும், தமிழகத்தை தாக்கிய கஜா, வர்தா புயல்களை விட அதிக வலிமையான புயலாக ஃபானி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஃபானி புயல் பாதிப்புகளுக்கு உதவிகள் பெற 1938 என்ற உள்துறை அமைச்சகத்தின் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபானி புயல் ஒடிஷாவில் கரையை கடந்தாலும் இதன் தாக்கம் ஆந்திர மாநிலத்திலும் எதிரொலித்துள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் உள்ள கலிங்கப்பட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், விசாகப்பட்டினம், கங்காவரம் துறைமுகங்களில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது
 
புயலின் காரணமாக கிழக்கு கடற்கரையில் உள்ள இரண்டு முக்கிய துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. எட்டு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது  வீடுகளில் இருந்த பெண்கள் வீட்டின் கதவைத் தாழிட முயன்று ஏழெட்டுப் பேர் கும்பலாக கதவை அடைக்க முயன்றனர். ஆனால் ஃபானிபுயலின் கோரம் அவர்களை அலேக்காக தூக்கி வீட்டுக்குள் எறிந்துவிட்டது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments