Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் யாகம் வளர்த்தால் ஒடிஷாவில் புயல் வருது: சுப.வீரபாண்டியன் கிண்டல்

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (19:25 IST)
தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மழைக்காக யாகம் செய்யுமாறு அறநிலையத்துறை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவுறுத்தியது. மழைக்காக யாகம் செய்வது மன்னர்கள் காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக இருந்து வரும் நிலையில் சில போலி பகுத்தறிவாதிகள் இதனை கிண்டல் செய்து கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியபோது, 'தமிழ்நாட்டில் #யாகம் வளர்த்தால், ஒடிசாவில் புயல் அடிக்கிறது. மிகவும் வலிமையான யாகம் போலிருக்கிறது' என்று கூறியுள்ளார்.
 
சுப.வீரபாண்டியனின் இந்த கருத்துக்கு நெட்டிசன்களும், டுவிட்டர் பயனாளிகளும் பதிலடி கொடுத்து வருகின்றனர். மற்ற மதங்களின் நம்பிக்கைகள் குறித்து வாயே திறக்காத நாத்திகவாதிகள் இந்துக்களை மட்டும் அடிக்கடி சீண்டுவதை ஒரு வாடிக்கையாக வைத்துள்ளதாக அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில் கி.வீரமணி, கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறி வாங்கிக்கட்டிக்கொண்ட சம்பவத்தின் பரபரப்பு முடிவதற்குள்ளேயே சுப.வீரபாண்டியனும் தற்போது நெட்டிசன்கள் கையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
திமுகவில் உள்ள 90% பேர் இந்துக்கள் என சமீபத்தில் ஓட்டுக்காக பிரச்சாரம் செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எந்த பகுத்தறிவாதிகளும் சுப.வீரபாண்டியனின் இந்த கருத்துக்கு வாயைத்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments