டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி.. மிகப்பெரிய மோசடி என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு..!

Siva
புதன், 29 அக்டோபர் 2025 (08:41 IST)
டெல்லியில் கடுமையாக அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை குறைக்க, சுமார் 53 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட செயற்கை மழைக்கான முயற்சி தோல்வியடைந்தது. '
 
இன்று காலை டெல்லி மேகமூட்டத்துடனும் புகையுடனும் காட்சியளித்தது. ஆனந்த் விஹார், ஐடிஓ போன்ற பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'மிகவும் மோசமான' நிலையில் நீடிக்கிறது.
 
ஐஐடி-கான்பூருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த செயற்கை மழை  சோதனையில், போதுமான ஈரப்பதம் இல்லாததால் செயற்கை மழை பெய்யவில்லை என்று அரசு ஒப்புக்கொண்டது. இருப்பினும், துகள்கள் குறைய முயற்சி உதவியதாக தெரிவித்துள்ளது.
 
இந்த முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அரசியல் மோதல் வெடித்துள்ளது. எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி இது ஒரு "பெரிய மோசடி" என்றும், பாஜக இந்திரனின் புகழை திருட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. 
 
டெல்லியில் ஒரு துளிகூட மழை பெய்யவில்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சௌரப் பரத்வாஜ் விமர்சித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments