இந்திய ரயில்வேயின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட ரயில் சேவையான 'தேஜாஸ் விரைவு ரயில்', 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி (IRCTC)-யால் இயக்கப்படுகிறது. புது டெல்லிக்கும் லக்னௌவுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில், தற்போது 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சேவையை தொடங்கிய முதல் மாதத்திலேயே ரூ. 7.73 லட்சம் வருவாய் ஈட்டி தேஜாஸ் சாதனை படைத்தது.
இந்த ரயிலின் கட்டணம், சதாப்தி மற்றும் வந்தே பாரத் போன்ற பிற ரயில்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. புது டெல்லி - லக்னௌ வழித்தடத்தில், தேஜாஸ் ரயிலின் ஏசி இருக்கை வசதிக்கு ரூ. 1,679-ம், எக்ஸிக்யூட்டிவ் இருக்கை வசதிக்கு ரூ. 2,457-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதிகக் கட்டணம் இருந்தபோதிலும், அதன் தரமான சேவைக்காக தேஜாஸ் ரயில் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.