திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பிற்காக பிரம்பு கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் தலைவர் கருணாகரன் ரெட்டி பேட்டியளித்துள்ளார்.
திருப்பதி மலை பாதையில் செல்லும் பக்தர்களை சிறுத்தை தாக்கி வருவதாகவும் சமீபத்தில் 6 வயது சிறுமி உயிர் இழந்த நிலையில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் திருப்பதி மலை பாதையில் வனவிலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு பிரம்பு கம்பு வழங்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி வேறு சில பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை பிடிபட்ட நிலையில் மேலும் ஒரு சிறுத்தை மலை பாதையில் நடமாடி வருவதாக கூறப்படுவது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.