Publish Date: Sun, 13 Aug 2023 (17:08 IST)
Updated Date: Sun, 13 Aug 2023 (17:09 IST)
திருப்பதி மலை பாதையில் செல்ல சிறுவர்களுக்கான அனுமதி இல்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் சென்ற சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். அதன் பிறகு அவர் சிறுத்தை தாக்கி பலியானார் என்பதும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலை பாதையில் செல்ல சிறுவர் சிறுமிகளுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது
அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே செல்ல அனுமதி என்றும் அறிவித்துள்ளது. மேற்கண்ட விதிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
Mahendran
Publish Date: Sun, 13 Aug 2023 (17:08 IST)
Updated Date: Sun, 13 Aug 2023 (17:09 IST)