Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பதி மலைப்பாதையில் சிறுமியின் சடலம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

Advertiesment
திருப்பதி மலைப்பாதையில் சிறுமியின் சடலம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!
, சனி, 12 ஆகஸ்ட் 2023 (09:26 IST)
திருப்பதி மலைப்பாதையில் திடீரென காணாமல் போன சிறுமி  இரவு சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பதி மலை பாதையில் நேற்று இரவு லட்சிதா என்ற சிறுமி திடீரென காணாமல் போனார். அவரை அவரது பெற்றோர்கள் மற்றும் காவல் துறையினர் வனப்பகுதியில் தேடிக் கொண்டிருந்த நிலையில் பலத்த காயங்களுடன் அடர்ந்த வனப்பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் சிறுத்தையால் தாக்கப்பட்ட இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
 
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் மூன்று வயது சிறுவனை சிறுத்தை தாக்கியது என்பதும் இந்த சம்பவமும் சிறுமி உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தான் நடந்தது என்றதும் குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை அடுத்து பக்தர்கள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமெரிக்கா: ஹவாய் காட்டுத்தீயில் காணாமல் போன 1000 பேர், 55 பேர் பலி - என்ன நடக்கிறது?