Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காம்ரேடுகளை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்: கேரளா எக்சிட் போல் முடிவுகள்

Webdunia
திங்கள், 20 மே 2019 (13:02 IST)
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று முடிவடைந்த நிலையில் அனைத்து ஊடகங்களும் எந்த மாநிலத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துகணிப்பை வழங்கி வருகின்றன. 
 
இந்நிலையில் கேராளாவில் ஆளும் இடதுசாரி கட்சியை விட காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. 
 
அதன்படி இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் காங்கிரஸுக்கு 16 இடங்களும், இடதுசாரிகளுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்றும், மலையாள மனோரமா நடத்திய கருத்து கணிப்பில் காங்கிரஸுக்கு 13 இடங்களும், இடதுசாரிகளுக்கு 2 இடங்களும், மீத 5 இடங்கள் இழுபறியாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.  
 
பாஜகவுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தென்னிந்தியாவில் காங்கிரஸ் கூட்டணிக்கான வெற்றிவாய்ப்பு கேரளா மற்றும் தமிழகத்தில் அதிகம் உள்ளது தெரியவருகிறது. 
 
கேராளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும் மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சிகள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு பகுதியில் வேட்பாளாராய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments