Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருங்காய டப்பா காங்கிரஸுடன் இணைப்பு? பாஜக முக்கிய புள்ளி பேட்டி!

Webdunia
திங்கள், 20 மே 2019 (12:36 IST)
அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்ற கட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது என இல.கணேசன் பேட்டி.
 
இறுதிகட்ட மக்களவை தேர்தல் நேற்று முடிந்த நிலையில் நேற்று மாலை தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வரிசையாக வெளியிட்டன. பெரும்பாலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தந்தி டிவி-யை, புதிய தலைமுறை, நியூஸ் 18 தமிழ்நாடு ஆகிய தமிழக ஊடகங்களும் திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இது குறித்து பாஜகவை சேர்ந்த இல.கணேசன் பேட்டி அளித்தார். 
 
அவர் கூறியதாவது, தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்புள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெளிவாக தெரியவந்துள்ளது 
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்றகட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது. 
 
தமிழக கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜகவுக்கு 50% வெற்றி வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கூட்டத்திற்கு நிபந்தனைகள்: ஆம்புலன்ஸுக்கு வழிவிட வேண்டும் - காவல்துறை உத்தரவு!

சிவாஜியை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி கிண்டல்!

உக்ரைன் போர் முடிவுக்கு வந்தால் பதவி விலகுவேன்: அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி!

தமிழக பெண்கள் vs வட இந்திய பெண்கள்.. அமைச்சர் டிஆர்பி ராஜா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

ஞாயிறு முதல் தி.நகர் மேம்பாலம் திறப்பு.. போக்குவரத்து நெரிசல் முடிவுக்கு வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments