குறையாத செல்பி மோகம்: கடலில் செல்பி எடுக்க முயற்சி செய்த பெண் டாக்டர் பரிதாப சாவு

வெள்ளி, 17 மே 2019 (12:03 IST)
கடலில் செல்பி எடுக்க முயற்சி செய்த பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள ஜக்கையா பேட்டையை சேர்ந்தவர் ரம்யா கிருஷ்ணா. இவர் கோவாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பொழுதுபோக்கிற்காக கோவா கடற்கரைக்கு சென்ற ரம்யா, தனது செல்போனில் கடல் அலையில் நின்றபடி செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ராட்சத அலைகள் மோதியதில் நிலைதடுமாறிய ரம்யா தண்ணீரில் விழுந்தார். அவரை அலைகள் இழுத்து செல்வதை பார்த்த அந்த பகுதி மீனவர்கள் அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவரை இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.

இந்த துயர சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரம்யாவின் உடல் அவரது சொந்த ஊரான ஜக்கையாபேட்டைக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு