Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமபிரான் பெயரில் அயோத்தி பாஜக தலைவர்கள் கொள்ளை - காங். குற்றச்சாட்டு!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (09:03 IST)
ராமபிரான் பெயரில் அயோத்தி பாஜக தலைவர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என காங்கிரஸ் குற்றச்சாட்டு. 

 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நிலம் வாங்குவதில் பெரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ராமர் கோயிலுக்காக ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.18.5 கோடி மதிப்பில் வாங்கியதாக சமீபத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. 
 
இந்த புகாரால் ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள், நேற்று மேலும் ஒரு புகாரை காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதாவது, ராமர் கோயிலுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரூ.2.50 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டு உள்ளது.
 
அதாவது, அயோத்தியில் 890 மீட்டர் நிலம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய பாஜக தலைவர் ஒருவர், அதை ரூ.2.50 கோடிக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், ராமபிரான் பெயரில் அயோத்தி பாஜக தலைவர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments