கடந்த 2019 -2020 ஆம் ஆண்டில் கட்சிகள் வாங்கிய நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்கள் இணையதளத்தில் பரவிவருகிறது.
அதன்படி, இந்திய அளவில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள பாஜக ரூ.750 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி ரூ.139 கோடி நன்கொடை பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.59 கோடி நன்கொடை பெற்றுள்ளது. சிபிஎம் ரூ.19.6 கோடி நன்கொடை பெற்றுள்ளது. சிபிஐ- ரூ.1.9 கோடி நன்கொடை பெற்றுள்ளது. திரிணாமுள் காங்கிரஸ் ரூ.8 கோடி நன்கொடை பெற்றுள்ளது.
மேலும் பாஜக ஆட்சி தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக இதன் நன்கொடை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.