பேய் ஓட்டுவதாக கூறி 7 வயது சிறுவனை அடித்தே கொன்ற 3 பெண்கள்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (08:58 IST)
திருவண்ணாமலை அருகே பேய் ஓட்டுவதாக கூறி மூன்று பெண்கள் 7 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு பேய் பிடித்ததாக அவரது உறவினர்கள் கருதினர். இதனை அடுத்து சிறுவனின் உடலில் இருந்த பேயை விரட்டுவதாக கூறி மூன்று பெண்கள் அந்த சிறுவனை மாறி மாறி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுத போதும் மூன்று பெண்கள் தொடர்ச்சியாக அடித்ததன் காரணமாக சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார் 
 
இந்த நிலையில் சிறுவனை அடித்து கொலை செய்த கேவி குப்பத்தை சேர்ந்த பாக்கியலட்சுமி திலகவதி கவிதா ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். சிறுவனுக்கு மருத்துவ முறையில் உடல்நிலை சரி இல்லாததை பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் அடித்தே கொலை செய்தனர் என 3 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments