Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய எல்லையில் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா! மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை!

Advertiesment
இந்திய எல்லையில் ஒரு கிராமத்தையே உருவாக்கிய சீனா! மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை!
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:32 IST)
இந்தியாவின் அருணாச்சல பிரதேச எல்லையில் புதிதாக ஒரு கிராமத்தை உருவாக்கியுள்ளது சீனா.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பிரச்சனை நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகின்றன. அவ்வப்போது சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீற முயல்வதும் அதை இந்திய வீரர்கள் தடுப்பதும் நடந்து வருகிறது.

இந்நிலையில் அருணாச்சல பிரதேச எல்லையில்.5 கி.மீ. தொலைவில் புதிய கிராமத்தை சீனா உருவாக்கியுள்ளது. இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தகிராமத்தில் 101 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அந்த கிராமம் இருக்கும் பகுதி இந்திய எல்லையில் இருந்தாலும் 1959 ஆம் ஆண்டில் இருந்து சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘சீனா கட்டுமானப்பணிகளை இந்திய எல்லையில் கட்டுவதை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் ’ எனக் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவர் சாந்தா மறைவு : அரசு மரியாதையுடன் அடக்கம்!