Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவர் சாந்தா மறைவு : அரசு மரியாதையுடன் அடக்கம்!

Advertiesment
மருத்துவர் சாந்தா மறைவு : அரசு மரியாதையுடன் அடக்கம்!
, செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:02 IST)
மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவிப்பு. 

 
பிரபல புற்றுநோய் மருத்துவ நிபுணர், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் மற்றும் சமூக சேவகியான டாக்டர் சாந்தா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். 
 
வாழும் அன்னை தெரசா வாழ்ந்து கொண்டிருந்த சாந்தா அவர்களின் உயிர் இழப்பு மனித குலத்திற்கே பேரிழப்பு என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பழைய அடையார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அங்கு நீண்ட வரிசையில் அவருடைய உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ, டிடிவி தினகரன் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, டெல்லியில் இருக்கும் முதல்வர் பழனிசாமி அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பூசி: “பேரழிவுமிக்க தோல்வியை உலகம் எதிர்நோக்கி உள்ளது” - ஐ.நா கடும் எச்சரிக்கை