Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரச்சினை பண்ணனும்னு முடிவா? பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் சீனா!

Advertiesment
பிரச்சினை பண்ணனும்னு முடிவா? பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் சீனா!
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (09:30 IST)
இந்தியா – சீனா இடையே கடந்த சில மாதங்களாக உறவு நிலையில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவின் முக்கிய நதியான பிரம்மபுத்திரா இடையே சீனா அணை கட்ட திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லடாக் எல்லை பிரச்சினைக்கு பிறகு சீனா – இந்தியா இடையேயான விரிசல் அதிகரித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்துள்ள நிலையில், கட்டுமான ஒப்பந்தங்களில் இருந்தும் சீன நிறுவனங்களை வெளியேற்றியுள்ளது. இந்நிலையில் சீனாவும் பதிலடியாக இந்தியாவிலிருந்து சீனா வரும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை போன்ற சிலவற்றை அறிவித்தது.

இந்நிலையில் இந்தியாவின் கிழக்கு மாகாணங்களின் பெரும் நீராதாரமாக உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. திபேத்தில் தொடங்கி அருணாச்சலபிரதேசம், அசாம் வழியாக வங்க தேசம் வரை நீளும் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டுவதால் இந்த மாகாணங்கள் நீராதாரத்தில் பிரச்சினையை சந்திக்கும் என கூறப்படுகிறது. இதற்கு இந்தியா முன்னதாகவே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் திபேத்திற்கான மின்சார உற்பத்திக்கான மின் உற்பத்திக்காக அணை கட்டப்படுவதாக சீனா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலுவடைந்தது புயல் சின்னம்! இலங்கை நோக்கி நகரும்! – வானிலை ஆய்வு மையம்!