Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

உணவு கேட்டு வந்த ஆசாமி; சந்தேகத்தால் பிடித்த விவசாயிகள்! – கிராமமே அழிந்த சோக சம்பவம்!

Advertiesment
World
, திங்கள், 30 நவம்பர் 2020 (08:21 IST)
நைஜீரியாவில் கிராமம் ஒன்றில் உணவு கேட்டு வந்த நபரை கிராம மக்கள் பிடித்து வைத்ததால் பயங்கரவாதிகள் கிராமத்தையே அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக வடகிழக்கு நைஜீரியா பகுதிகளில் அவர்களது ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் போர்னொ ஸ்டேட் அருகே உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பலர் விவசாய பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த ஆசாமி ஒருவன் தனக்கு உணவு தரும்படி அவர்களிடம் கேட்டுள்ளான். அவன் நடத்தைகளால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அவனை பிடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு செய்தி அனுப்பியுள்ளனர். ஆனால் அதற்குள்ளாக அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாத கும்பல் அந்த கிராமத்தினரை சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த படுகொலை சம்பவத்தில் 110 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் அந்த கிராமத்தில் இருந்த பெண்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நைஜீரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போஸ்டர்கள்: போயஸ் கார்டனில் பரபரப்பு!