Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6.3 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!

6.3 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு!
, திங்கள், 30 நவம்பர் 2020 (06:37 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 6.3 கோடியாக அதிகரித்துள்ளது
 
உலகம் முழுவதும் 63,055,216 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,464,800
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 43,533,300
பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 18,057,116 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,749,317 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 273,072 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,105,382 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,432,039 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 137,177 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 8,846,187 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,314,740 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 172,833 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,578,118 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்: உயிரிழப்பு வெறும் 9 மட்டுமே!