Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய குற்றவியல் சட்டம் இப்போது இல்லை: மத்திய அரசின் அறிவிப்பால் போராட்டம் வாபஸ்?

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (07:16 IST)
புதிய குற்றவியல் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததன் காரணமாக லாரி டிரைவர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
வடமாநிலங்களில் பல இடங்களில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் மத்திய அரசு தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. 
 
மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா என்பவர் இது குறித்து கூறிய போது புதிய குற்றவியல் சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னரே இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.  
 
மத்திய அரசு இந்த அறிவிப்பை அடுத்து லாரி ஓட்டுனர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாகவும் மத்திய அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைகள் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மீண்டும் நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

18 படிகளில் ஏறியதும் ஐயப்ப தரிசனம்: சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்..

முன்பதிவு இல்லா பெட்டியில் அதிக கூட்டம்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மது போதை ஆசாமி..!

தமிழகத்தில் ஏப்ரல் 15 வரை மலையேற்றத்துக்கு தடை! வனத்துறை முடிவுக்கு என்ன காரணம்?

முதல்முறையாக ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments