Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வட மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்..! இன்று இரவு மத்திய அரசு பேச்சுவார்த்தை..!!

Advertiesment
lorrys strike
, செவ்வாய், 2 ஜனவரி 2024 (17:12 IST)
வட மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு இன்று இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
 
 
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய ஆங்கிலேயர் ஆட்சிக் கால சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாட்சிய அதிநியம் ஆகிய மூன்று குற்றவியல் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததையடுத்து, அந்த மசோதாக்கள் சட்டமாகின.
 
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நாடுமுழுவதும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த மசோதாக்களில், கவனக்குறைவாக வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்திவிட்டு நிறுத்தாமல் செல்லும் அல்லது அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் செல்லும் ஓட்டுநர்களின் வழக்குகளில் ரூ.7 லட்சம் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து இந்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி மும்பை, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் இன்று இரவு 7 மணிக்கு பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தரையிறங்கிய விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு