இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதை அடுத்து மத்திய அரசு பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாத நிலையில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கச்சா எண்ணெய் ஒரு பேரல் சர்வதேச சந்தையில் 76 டாலராக விற்பனை ஆகி வரும் நிலையில் இந்த விலை இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை 6 முதல் 8 ரூபாய் வரை குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அது மட்டும் இன்றி நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசலுக்கான கலால் வரியையும் குறைக்க நாடா மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே குறைந்தபட்சம் ஆறு ரூபாய் அதிகபட்சம் பத்து ரூபாய் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்