Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியோடு இணைக்க மத்திய அரசு ஒப்புதல்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (16:44 IST)
தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியோடு இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு திடீரென கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக நேற்று மத்திய நிதி அமைச்சகம் கூறியதும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். லட்சுமி விலாஸ் வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இதனையடுத்து நேற்றைய அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்ஐ நோக்கி விரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ள லஷ்மி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியோடு இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. டிபிஎஸ் வங்கி சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஒரு வங்கியாகும். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments