Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லட்சுமி விலாஸ் வங்கி வீழ்ச்சிக்கு என்ன காரணம்? வங்கி நிர்வாகி தகவல்!

லட்சுமி விலாஸ் வங்கி வீழ்ச்சிக்கு என்ன காரணம்? வங்கி நிர்வாகி தகவல்!
, புதன், 18 நவம்பர் 2020 (16:17 IST)
தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி விலாஸ் வங்கிக்கு திடீரென கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக நேற்று மத்திய நிதி அமைச்சகம் கூறியதும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
லட்சுமி விலாஸ் வங்கியில் எவ்வளவு டெபாசிட் செய்து இருந்தாலும் ரூபாய் 25 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய கட்டுப்பாடு வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது இதனையடுத்து நேற்றைய அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்ஐ நோக்கி விரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த கட்டுப்பாடு ஒரு மாதத்திற்கு மட்டும் தான் என்றும் எனவே லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் ஆர்பிஐ நேற்று விளக்கம் அளித்திருந்தது 
 
இந்த நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி மனோகரன் அவர்கள் இந்த கட்டுப்பாடு குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது: லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் டெபாசிட் செய்தவர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் 2020ஆம் நிதியாண்டில் லட்சுமி விலாஸ் வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்து உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லட்சுமி விலாஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார் 
 
மேலும் ஏடிஎம் மற்றும் வங்கிக் கிளைகள் உடனடியாகச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களின் அச்சம் விலகவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பசுக்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கும் பாஜக!