தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

Mahendran
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (10:39 IST)
மேற்குவங்க மாநிலத்தில் இந்துக்கள் குறி பார்த்து தாக்கப்படுவதால், தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் இந்துக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது அவசியம் என பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் என்பவர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
மேற்குவங்க மாநிலத்தில் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது என்பதும், இந்த போராட்டம் சில இடங்களில் வன்முறை வன்முறையாக மாறியது என்பது தெரிந்தது.
 
இந்த நிலையில், இந்துக்கள் குறிவைத்து தாக்குவதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் ஹிந்துக்கள் தங்கள் வீடுகளில் டிவி, பிரிட்ஜ் உள்பட வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருப்பது போல், ஆயுதத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும், தங்கள் பாதுகாப்புக்கு போலீசை அழைப்பது இனிமேல் பயன்தராது. இந்துக்கள் தாங்களே தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம் என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு வந்த பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி  கண்டனம் தெரிவித்துள்ளது.
 
திலீப் கோஷின் இந்த பேச்சை வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், இரு மத பிரிவினர் இடையே  வகுப்புவாதம், மோதலை உருவாக்கவே வழிவகை செய்யும் என்றும், அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments