Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் தேர்தல் ஜேடியூ- பாஜக தொகுதி பங்கீடு: யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (19:24 IST)
பீகார் தேர்தல் ஜேடியூ- பாஜக தொகுதி பங்கீடு
பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இதனை அடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை முடிவு செய்வதில் தீவிரமாக உள்ளன என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி பீகார் மாநிலத்தில் ஜேடியூ மற்றும் பாஜக தொகுதி பங்கீடு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. பீகார் மாநிலத்தில் உள்ள மொத்தம் உள்ள தொகுதிகளில் 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் ஜேடியூ போட்டியிட உள்ளது. மீதமுள்ள 121 இடங்களில் பாஜக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஜேடியூவின் 122 தொகுதிகளில் 7 தொகுதிகள் மாஞ்சி கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு கூட்டணி கட்சியான பாஜக வி.ஐ.பி கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து பாஜக கூட்டணியின் தொகுதி ஒதுக்கீடு முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விரைவில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

கடலூர் அருகே கடலில் சிக்கிய மீனவர்கள் பத்திரமாக மீட்பு! களத்தில் இறங்கிய ஹெலிகாப்டர்..!

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. சில தேர்வுகளும் ரத்து..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் தொடர்ந்து குறைவு: எப்போது கரையை கடக்கும்?

இன்று காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments