Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக கொள்கையை தேர்தல் கமிஷன் சட்டம் ஆக்க வேண்டும்: வேண்டுகோள் விடுத்த பிரபலம்!

Advertiesment
பாஜக கொள்கையை தேர்தல் கமிஷன் சட்டம் ஆக்க வேண்டும்: வேண்டுகோள் விடுத்த பிரபலம்!
, திங்கள், 5 அக்டோபர் 2020 (16:39 IST)
பாஜகவின் கொள்கைகளை தேர்தல் கமிஷன் சட்டமாக்க வேண்டும் என பாஜக பிரபலம் நிர்மல் குமார் என்பவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ஆட்சியில் பதவியில் உள்ளவர்கள் கட்சியில் பதவியில் இருக்க கூடாது என்ற கொள்கையை பாஜக கடைபிடித்து வருவதாகவும், அந்த வகையில் சமீபத்தில் பாஜகவின் புதிய தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட ரவி என்ப்வர், கர்நாடக மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வந்ததை அடுத்து தனக்கு பாஜகவின் கட்சி பதவி கிடைத்த உடன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்றும் நிர்மலகுமார் கூறியுள்ளார்.
 
எனவே பாஜகவின் இந்த கொள்கையை தேர்தல் கமிஷன் சட்டமாக்க வேண்டும் என்று பாஜகவின் பிரபலம் நிர்மல் குமார் தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த காலங்களில் திமுக உள்பட ஒருசில கட்சிகள் அரசு அலுவலகங்களை கட்சி அலுவலகம் போல் பயன்படுத்தி வந்தார்கள் என்றும் இதனை தடுப்பதற்காக கட்சியில் பதவி உள்ளவர்கள் ஆட்சியில் பதவியில் இருக்கக் கூடாது என்ற சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று என் நிர்மல் குமார் தனது டுவிட்டரில் கூறியுள்ளார் 
 
ஆனால் இது நடைமுறையில் சாத்தியமா? இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உடன் படுவார்களா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! கிருமி கண்டுபிடித்தவர்களுக்கு விருது!