Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுதி எல்லாம் கிடையாது.. அனைத்து பெண்களுக்கும் ரூ.1000.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 4 மார்ச் 2024 (13:48 IST)
தமிழ்நாட்டில் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பட்ஜெட்டில் ஆரம்பித்துள்ளார். 
 
மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் தொடர்ந்து வருகிறது என்பதும் பார்த்து வருகிறோம். 
 
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தை போல எந்த மாநிலத்திலும் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படாமல் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் டெல்லியில் 18 வயதில் நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து டெல்லியில் உள்ள பெண்கள் தங்கள் மாநில முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை-மைசூர் அதிவிரைவு ரயில் சாதாரண ரயிலாக மாற்றம்: என்ன காரணம்?

நேரு மாடல் தோல்வியடைந்து விட்டது. சீர்திருத்த முயற்சிகள் செய்கிறோம்: அமைச்சர் ஜெய்சங்கர்

என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றங்களுக்கும், சரிவுக்கும், சோனியா குடும்பமே காரணம்: மணிசங்கர் அய்யர்..!

த.வெ.க.வில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பேன்: ஆதவ் அர்ஜூனா

பிரபல இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு: கனிமொழி எம்பி, கமல்ஹாசன் இரங்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments