Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 7 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

Mahendran
திங்கள், 4 மார்ச் 2024 (13:43 IST)
இன்று முதல் 7 நாட்களுக்கு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைக்காலம் மற்றும் குளிர் காலம் முடிவடைந்து கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் கோடையின் ஆரம்பமே உக்கிரமாக இருக்கிறது என்பதும் மார்ச் 1 முதல் படிப்படியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிக வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வெப்பநிலையும் படிப்படியாக அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments