Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெஜ்ரிவாலை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடுவேன்: பிரபல நடிகையின் காதலர் அறிவிப்பு..!

arvind kejriwal

Mahendran

, வியாழன், 29 பிப்ரவரி 2024 (15:46 IST)
டெல்லியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் பறித்ததாக சுரேஷ் சந்திரசேகர் என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மிரட்டிய வாங்கிய பணத்தில் அவர் பிரபல நடிகைகளுக்கு கோடிக்கணக்கான செலவு செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
மேலும் இவருடைய காதலி தான் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சுரேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் 
 
இந்த நிலையில் சிறையில் இருந்தே அவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சிபிஐ முன்பு உண்மையை வெளிப்படுத்துவேன், அரவிந்த் கெஜ்ரிவால் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டிடுவேன். எனக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
ஏற்கனவே இவருக்கு 2023 ஆம் ஆண்டு டெல்லி கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் முறைகேடு செய்து தான் புதிய வீடு வாங்கியதாகவும் அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவரது வீட்டிற்கு மரச்சாமான்கள் வாங்கியதற்கு நான் தான் பணம் கொடுத்திருந்தேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
 
 சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் எழுதும் கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறு தவறு நடந்துவிட்டது: சீன கொடி விளம்பர சர்ச்சைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்..!