அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு ஏழு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 7 முறையும் அவர் ஆஜராகாததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் எட்டாவது முறையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் வரும் 12ஆம் தேதி ஆஜர் ஆவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 12ஆம் தேதிக்கு பிறகு சம்மனுக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாக அமலாக்கத்துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் அதுவரை தனக்கு அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்
மதுபான கொள்கை வழக்கில் ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எட்டாவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது என்பதும் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் பனிரெண்டாம் தேதி வரை தனக்கு அவகாசம் வேண்டும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்
இந்த கடிதத்தை அடுத்து அமலாக்கத்துறை 12ஆம் தேதி ஆஜராக ஒப்புக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.