இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 4வது ரீடெயில் ஸ்டோர்.. செப் 4ஆம் தேதி திறப்பு விழா..!

Mahendran
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (11:46 IST)
உலக நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தனது ரீடெயில் ஸ்டோர்களை அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 4-ஆம் தேதி புனேவில் புதிய கடை திறக்கப்பட உள்ளது. இது மும்பை, டெல்லி, பெங்களூரை அடுத்து நாட்டில் ஆப்பிள் திறக்கும் நான்காவது ரீடெயில்  ஸ்டோர் ஆகும்
 
புதிய புனே ஸ்டோருக்கான வடிவமைப்பு, பெங்களூரு ஸ்டோரில் பயன்படுத்தப்பட்டதை போலவே உள்ளது. இந்தியாவின் தேசியப் பறவையான மயில், பெருமை மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. புனேவின் கோரேகான் பார்க் கடை சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் உள்ள ஆப்பிளின் மிகப்பெரிய சில்லறை விற்பனைக் கடைகளில் ஒன்றாக இருக்கும்.
 
இந்த ஸ்டோரில் வாடிக்கையாளர்களுக்கு ஐபோன், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட ஆப்பிளின் முழுமையான தயாரிப்பு பொருட்களை வாங்க உதவும். மேலும், கிரியேட்டிவ்ஸ், ஆப்பிள் ஸ்பெஷலிஸ்ட்ஸ் மற்றும் ஜீனியஸ் ஆகிய நிபுணர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் வழிகாட்டுதலைப் பெறலாம்.  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments