Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிங்கத்திடம் பலிஆடு போல் சென்றவரை காப்பாற்றிய வனவிலங்கு அதிகாரிகள்; வைரல் வீடியோ

Advertiesment
சிங்கத்திடம் பலிஆடு போல் சென்றவரை காப்பாற்றிய வனவிலங்கு அதிகாரிகள்; வைரல் வீடியோ
, புதன், 21 பிப்ரவரி 2018 (17:22 IST)
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வனவிலங்கு பூங்காவில் சிங்கத்திடம் இரையாக இருந்தவரை வனவிலங்கு அதிகாரிகள் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வனவிலங்கு பூங்காவில் இன்று காலை முருகன் என்பவர் சிங்கம் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தார். சிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி முழங்காலிட்டடு சென்றார். இதைக்கண்ட அங்கிருந்த பார்வையாளர்கள் கூச்சலிட, வனவிலங்கு காப்பக பாதுகாவலர்கள் முருகனை பத்திரமாக மீட்டனர். பாதுகாவலர்கள் சிலர் கிரேசி என்ற 3வயது சிங்கத்தை திசை திருப்பினர். அதே நேரத்தில் மற்றவர்கள் முருகனை வெளியே இழுத்து வந்தனர்.
 
இந்த பரபரப்பு சம்பவம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்கு பாதுகாவலர்கள் முருகனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
 

நன்றி: Colourful Kerala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி அணிக்கு மீண்டும் திரும்புவதாக கடிதம் எழுதிய நடிகை