Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்போன் கொள்ளையர்களிடம் போராடிய 15 சிறுமிக்கு வீரதீர விருது?

Advertiesment
செல்போன் கொள்ளையர்களிடம் போராடிய 15 சிறுமிக்கு வீரதீர விருது?
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:33 IST)
செல்போன் கொள்ளையர்களிடம் போராடிய 15 சிறுமிக்கு வீரதீர விருது?
பஞ்சாப் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய செல்போனை பறித்து சென்ற கொள்ளையர்களிடம் போராடிய வீடியோ சமூக வலை தளத்தில் கடந்த இரண்டு நாட்களாக வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவருக்கு தற்போது போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்து அவரது வீர தீர செயலுக்கான விருது அளிக்க பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஞாயிறு அன்று டியூஷன் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 15 வயது சிறுமி குமாரி என்பவரின் கையிலிருந்த ஸ்மார்ட்போனை பைக்கில் வந்த இருவர் பறித்து சென்றனர். உடனே உஷாரான குமாரி அவர்களை விரட்டிப் பிடித்து போனை மீட்டார். இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக கூடி கொள்ளையர்களில் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் 
 
இது குறித்து சிறுமி கூறிய போது ’கொரோனாவல் எங்கள் குடும்பம் மிகுந்த சிக்கலில் தள்ளப்பட்டுள்ளது. எனது படிப்புக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக கூலி வேலை செய்யும் என்னுடைய அப்பா தவணை முறையில் எனக்கு போன் வாங்கி கொடுத்தார். அந்த போனை தான் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்
 
செல்போன் போனால் படிக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலேயே கொள்ளையர்களை விரட்டி பிடித்தேன் என்று அவர் கூறியுள்ளார். கொள்ளையர்கள் தாக்கியதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது குமாரியின் செயலை பாராட்டி அவரது வீரதீர விருது வழங்க அவருக்கு போலீசார் பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: பெரும் பரபரப்பு