Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 20 April 2025
webdunia

தேமுதிக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: பெரும் பரபரப்பு

Advertiesment
தேமுதிக
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (12:19 IST)
தேமுதிக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீச்சு
சென்னை பெரும்பாக்கம் என்ற பகுதியில் முன்விரோதம் காரணமாக தேமுதிக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
பரங்கிமலை தேமுதிக ஒன்றிய துணைச் செயலாளராக இருந்து வரும் ராஜசேகர் என்பவருக்கும் அருள் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் முதல் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. இதில் அருள் தாக்கப்பட்டதால் அவர் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ராஜசேகர் மீது அருள் உள்ளிட்ட 7 பேர் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தி விட்டு அவரது வீட்டிலும் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டி மாயமாகி விட்டதாகவும் இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
இந்த தாக்குதலின் பின்னணியில் திமுக பிரமுகர் ஒருவரும் இருப்பதாக கூறி அவரது வீடு மீது ராஜசேகரின் ஆதரவாளர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜசேகர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர் என்பதும் இந்த தாக்குதல் தொடர்பாக சிசிடிவி காட்சி அடிப்படையில் மேலும் இரண்டு ரவுடிகளை தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
முன்விரோதம் காரணமாக தேமுதிக பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசி அரிவாளால் தாக்குதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை பெரும்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி அரசியல் எண்ட்ரி எப்படி இருக்கும்?