Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சானிட்டைசர் ஊற்றி காதலியின் முகத்தைக் கொளுத்திய காதலன்! அதிர்ச்சி சம்பவம்!

Advertiesment
Man fired his lover face with sanitizer
, திங்கள், 13 ஜூலை 2020 (11:47 IST)
சண்டிகர் மாவட்டத்தில் கடன் கேட்டு அதைக் காதலி தர மறுத்ததால் அவர் முகத்தில் சானிட்டைசரை ஊற்றிக் கொளுத்தியுள்ளார் நடேஷ் என்ற நபர்.

கொரோனா காரணமாக கிருமிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக சானிட்டைசர்களை அதிகளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஆனால் இந்த சானிட்டைசர்களால் ஆங்காங்கே சில வேண்டத்தகாத சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் சண்டிகார் மாநிலத்தைச் சேர்ந்த நடேஷ் என்பவர் சானிட்டைசரை தன் காதலியின் முகத்தில் ஊற்றிக் கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடேஷ் தன் காதலியிடம் கடனாக 2000 ரூபாய் கடனாகக் கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை என சொன்னதால் ஆத்திரமான நடேஷ் தன்னிடம் இருந்த சானிட்டைசரை அவர் மேல் ஊற்றி கொளுத்தியுள்ளர். இதனால் அவர் அலறவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அவரைக் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சைக்குப் பின் காவல்நிலையம் சென்ற அவர் காதலன் பற்றி புகார் அளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கம்யூனிஸ்டுகளை கலாய்த்த எஸ்.வி சேகர்; ஆமா சாமி போட்ட எச் ராஜா?