Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 ஆண்டுகளாக நடைபெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

9 ஆண்டுகளாக நடைபெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
, திங்கள், 13 ஜூலை 2020 (11:15 IST)
9 ஆண்டுகளாக நடைபெற்ற பத்மநாபசுவாமி கோயில் வழக்கு
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கலாம் என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் லலித், இந்து மல்கோத்ரா அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கோயிலை நிர்வகிக்க இடைக்கால ஏற்பாடாக திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. புதிதாக நிர்வாக குழு அமைக்கும் வரை, நீதிபதி தலைமையிலான குழு கோயிலை நிர்வகிக்கும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இந்த வழக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்றது. 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டபோராட்டத்திற்கு இன்று தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்
 
கோயில் நிலவறைகளில் உள்ள பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கணக்கிட ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பதும் இதனையடுத்து 5 நிலவறைகள் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டதில் ஆபரணங்களின் மதிப்பு 1.5 லட்சம் கோடி ரூபாய் என தெரியவந்தது என்பதும் தெரிந்ததே

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அம்பானியை பின்னுக்கு தள்ளிய ‘அயர்ன் மேன்’ – உலக பணக்காரர்கள் பட்டியல்!