இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 8.50 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் பிரபலங்களும் திரையுலக பிரபலங்களும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் ஆனால் தமிழிசை அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இதுகுறித்து தெலுங்கானா மாநில ஆளுனர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறிய போது, ‘நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். எனக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தங்களை தாங்களே சோதனை செய்து கொள்ளுங்கள். தொடக்கத்திலேயே சோதனை செய்தால் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம், மற்றவர்களுக்கு பரவுவதையும் தடுக்கலாம். எனவே தயக்கமின்றி உடனடியாக சோதனை செய்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்