Publish Date: Tue, 13 Sep 2022 (09:27 IST)
Updated Date: Tue, 13 Sep 2022 (09:29 IST)
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று 350 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து இன்று வாரத்தின் இரண்டாவது நாளிலும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 468 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 18040 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது