Publish Date: Wed, 07 Sep 2022 (07:33 IST)
Updated Date: Wed, 07 Sep 2022 (07:36 IST)
தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைமை செயல் அதிகாரி கைது!
தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நாராயணன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா லட்சுமணன் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது
பங்குச்சந்தை அதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பது புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த கைது நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தேசிய பங்குச் சந்தையில் பணியாற்றிய முக்கிய அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.