Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்று உச்சம் செல்லும் பங்குச்சந்தை: 64 ஆயிரத்தை நெருங்கும் சென்செக்ஸ்..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (09:27 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் மும்பை பங்குச்சந்தை 63,000 அதிகமாக விற்பனை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று சுமார் 400 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் இன்று ஆரம்பத்திலேயே 170 புள்ளிகள் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே ரீதியில் சென்செக்ஸ் 64 ஆயிரத்தை இன்னும் ஓரிரு நாளில் நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
இன்றைய பங்குச்சந்தை  வர்த்தகத்தில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 590 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி ஐம்பது புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 18,870 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதால் அதில் முதலீடு செய்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments