பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் அதில் முதலீடு செய்தவர்கள் நல்ல லாபத்தை பெற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
ஆனால் நேற்று திடீரென பங்குச்சந்தை சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது.
மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 140 புள்ளிகள் சரிந்து 63 ஆயிரத்து 90 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 48 புள்ளிகள் சார்ந்து 18,723 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
ஓரிரு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் எனவே தகுந்த ஆலோசனையின் பேரில் நல்ல நிறுவனங்களில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யுமாறு முதலீட்டு ஆலோசர்கள் அறிவுறுத்து உள்ளனர்.