Publish Date: Mon, 26 Jun 2023 (10:00 IST)
Updated Date: Mon, 26 Jun 2023 (10:02 IST)
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை கிட்டத்தட்ட பெரிய மாறுதல் என்று வெள்ளிக்கிழமை நிலைமையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் வெறும் 20 புள்ளிகள் மட்டும் சரிந்து 62952 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் நிஃப்டி வரும் 2 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 18,666 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. இன்றைய பங்குச்சந்தையின் ஆரம்பம் பெரிய மாற்றம் இன்றி தொடங்கியுள்ளதால் மதியத்திற்கு மேல் ஏறுமா இறங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் அதே நேரத்தில் சென்செக்ஸ் 63 ஆயிரத்தை விட குறைந்துள்ளது பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.