ஏர்டெல் நிறுவனத்தின் சிஇஓ அஜய் சித்தாரா என்பவர் திடீரென தனது பதவியே ராஜினாமா செய்து உள்ள நிலையில் அந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 0.52% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் சித்ரா இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டாலும் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை அவர் தனது பணியை தொடர்வார் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் வாணி வெங்கடேஷ் தலைமையிலான குழு ஏர்டெல் நிர்வாகத்தை வழி நடத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அஜய் சித்தாராவின் பங்களிப்புகளை நாங்கள் அங்கீகரிக்க விரும்புகிறோம். ஏர்டெல் உடனான அவரது 23 ஆண்டுகால பணி சிறப்பானது அவரது எதிர்காலம் சிறந்த வகையில் இருக்க வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளது
இந்த நிலையில் அஜய் சித்தாரா ராஜினாமா செய்ததை அடுத்து பார்தி ஏர்டெல் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 0.52% சார்ந்து ரூபாய் 851.80 என வர்த்தகம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது