இந்திய பங்குச்சந்தை நேற்றும் இன்றும் உயர்ந்து வருவது, முதலீட்டாளர்களுக்கு மீண்டும் நம்பிக்கையை தந்துள்ள நிலையில், பழைய நிலைக்கு மீண்டும் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில், இன்று 800 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 1,000 புள்ளிகள் மேல் உயர்ந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்றைய பங்குச்சந்தையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 887 புள்ளிகள் உயர்ந்து 75,052 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 263 புள்ளிகள் உயர்ந்து 22,777 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், பஜாஜ் உள்ளிட்ட சில பங்குகள் மட்டுமே குறைந்துள்ளதாகவும், மற்ற அனைத்து பங்குகளும் மிக அதிகமாக உயர்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதே போல் பங்குச்சந்தை வளர்ச்சி தொடர்ந்து நீடித்தால், சென்செக்ஸ் மீண்டும் 80,000 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக, பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.