பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாகவே சரிவில்தான் உள்ளது. சில நாட்களில் உயர்ந்தாலும், மீண்டும் சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை தந்து கொண்டிருக்கிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், இந்த வாரத்தை பொருத்தவரை திங்கள்கிழமை காலை உயர்ந்தது போல் தெரிந்தாலும், திடீரென மீண்டும் சரிந்தது. நேற்று பங்குச்சந்தை சரிந்த நிலையில் இருந்தது. இன்றும் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் சரிந்து, 73,752 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 110 புள்ளிகள் சரிந்து, 22,378 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் உயர்ந்துள்ள பங்குகள்:
கோடக் மகேந்திரா வங்கி
டாடா மோட்டார்ஸ்
ஹெச்டிஎஃப்சி வங்கி
சன் பார்மா
ஐடிசி
பஜாஜ் பைனான்ஸ்
ஹிந்துஸ்தான் லீவர்
அதேபோல், இன்றைய பங்குச்சந்தையில் குறைந்துள்ள பங்குகள்:
டைட்டான்
ஏசியன் பெயிண்ட்
ஸ்டேட் வங்கி
பாரதி ஏர்டெல்
டாடா ஸ்டீல்
டிசிஎஸ்