Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை... தோனியா இப்படி பேசுவது?

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:37 IST)
இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என சிஎஸ் கேப்டன் தோனி கருத்து. 
 
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது என்றே கூறலாம். 
 
நேற்றைய போட்டியில் தோனி அணியை தேர்வு செய்ததிலேயே தோல்வியை உறுதி செய்துவிட்டார் என்று தான் கூறவேண்டும். தொடர்ச்சியாக மோசமாக விளையாடி வரும் கேதார் ஜாதவ் மற்றும் பியூஷ் சாவ்லாவை அவர் ஆடும் அணியில் தேர்வு செய்தது மிகப் பெரிய தவறு என்றும் ஜெகதீசன், கெய்க்வாட், சாண்ட்னர் ஆகிய இளைஞர்களுக்கு வாய்ப்பு தராமல் பிடிவாதமாக மோசமாக விளையாடுபவர்களுக்கு தொடர்ந்து அவர் வாய்ப்பு கொடுக்கிறார் ஏன் என்பது புரியாத மர்மமாகவே இருக்கிறது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
 
இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்காதே தோனிக்கு எப்படி வெற்றி கிடைக்கும் என்பதே கேள்வியாக உள்ளது. இதே பிடிவாதத்தில் அடுத்து வரும் நான்கு போட்டிகளில் விளையாடினால் நிச்சயம் தோல்வி அடையும் என்பது கண்கூடாக தெரிகிறது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். 
 
ஆனால் தோனி நேற்று போட்டி முடிந்ததும் அளித்த பேட்டியில், அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு போதிய உத்வேகம் இல்லை. அதனால் தான் அவர்களை களமிறக்கவில்லை. ஆனால், இனி வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments