Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் மகேசர்: தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்..!

வருந்தும் உள்ளங்களுக்கெல்லாம் மருந்தாய் மகேசர்: தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்..!

Mahendran

, வெள்ளி, 6 டிசம்பர் 2024 (18:30 IST)
வருந்தும் உள்ளங்களுக்கு மருந்தாய் இருக்கும் மகேசர், மன உளைச்சலால் வாடுபவர்களுக்கு நிம்மதியை கொடுப்பார் என்றும் அப்படி ஒரு கோயில் விருத்தாச்சலம் அருகே உள்ள தாகம்தீர்த்தபுரீஸ்வரர் கோயில் என்று அந்த பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
 
திருஞானசம்பந்தர் உள்பட பல முக்கிய ஆன்மீகவாதிகள் வணங்கி இந்த கோயில் குறித்து பாடல் பாடி உள்ளனர். முருகப் பெருமானை பற்றி அருணகிரிநாதர் இந்த கோவில் குறித்து சில பாடல்களை தெரிவித்துள்ளார். இந்த தலம் அமைந்துள்ள இறையூர் என்ற பகுதியை பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கிழக்கு நோக்கி இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் வெளியே கணபதி சன்னிதானம், ஆலயத்தில் உள்ளே சிவபெருமான் அருளிய கதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருணை கடலானதாக தாகம்தீர்த்தபுரீஸ்வரர்  இந்த கோயிலில் இருக்கின்றனர். இவரை வணங்கினால் மனதில் உள்ள வருத்தங்கள் எல்லாம் பறந்து ஓடிவிடும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த தளம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (06.12.2024)!