Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்பகோணம் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது: தொன்மை மாறாமல் புதுப்பித்து சாதனை..!

கும்பகோணம் கோவிலுக்கு யுனெஸ்கோ விருது: தொன்மை மாறாமல் புதுப்பித்து சாதனை..!

Siva

, வெள்ளி, 6 டிசம்பர் 2024 (17:38 IST)
கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதை அடுத்து யுனெஸ்கோ விருது கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே துக்காட்சி கிராமத்தில் ஆபத் சகாயேஸ்வரர் என்ற கோயில் உள்ளது. 1300 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் ஏழு ஏக்கரில் அமைந்துள்ள நிலையில், ராஜராஜ சோழனின் மூதாதையர்கள் இந்த கோவிலை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த கோயில் கலை நயமிக்க அழகிய சிலைகளுடன் உள்ளது.

இந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை முயற்சியால் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டு ஐந்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்தது. கடந்த ஆண்டு இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கும்பாபிஷேகமும் நடந்தது.

இந்த நிலையில், இந்த கோவில் தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதால் யுனெஸ்கோ அமைப்பாளர் அங்கீகரிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினார். யுனெஸ்கோ அமைப்பினரும் நேரில் வந்து பார்த்து இந்த கோயிலுக்கு விருது வழங்கியுள்ளனர். தொன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதிற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்த கோயில் உலகம் முழுவதும் பிரபலமாகும் என்றும், சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடுகிறது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மும்பையில் திடீரென நிறுத்தப்பட்ட ‘புஷ்பா 2’ திரைப்படம்.. என்ன நடந்தது தியேட்டரில்?