சீக்கிய குருமார்களால் தண்டனை பெற்று பொற்கோவிலுக்கு காவல் நின்ற அகாலிதள தலைவர் மீது ஆசாமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் செல்வாக்கு பெற்ற அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பது சிரோமணி அகாலி தள கட்சி. இந்த கட்சியின் தலைவர் சுக்பீர் சிங். அகாலி தள கட்சி பஞ்சாபில் 2007 முதல் 2017 வரை 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது சீக்கிய புனித விதிகளை மீறியதாக அந்த கட்சியினர் மீது சீக்கிய குருமார்கள் தன்கா தண்டனையை வழங்கியுள்ளனர்.
தன்கா தண்டனை பெற்றவர்கள் சீக்கிய புனித ஸ்தலங்களில் சேவை செய்து தங்கள் தவறுகளுக்கு மன்னிப்பு கோர வேண்டும். அதன்படி சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங், சீக்கியர்களின் புனிதக் கோவிலான பொற்கோவிலில் காவலாளியாக சேவை செய்து வருகிறார்.
நேற்று முன் தினம் முதலாக இந்த தண்டனையை ஏற்றி நீல நிற உடையுடன் வீல் சேரில் அமர்ந்தபடி, கையில் ஈட்டி ஏந்தி காவல் காத்து வருகிறார் சுக்பீர் சிங். இதை வீடியோ எடுக்க செய்தி தொலைக்காட்சி நிருபர்கள் வந்திருந்த நிலையில் அங்கு வந்த ஒரு ஆசாமி திடீரென சுக்பீர் சிங்கை நோக்கி சுட்டார். ஆனால் சுற்றி இருந்தவர்கள் உடனடியாக அவரை தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
அந்த நபரை போலீஸார் கைது செய்த நிலையில் அவரது பெயர் நரேன் சிங் சௌரா என்றும், அவர் பபர் கால்ஸா என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்துள்ளது. அகாலி தள கட்சி தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான சுக்பீர் சிங் மீது நடந்த இந்த துப்பாக்கிச்சூடு கொலை முயற்சி பஞ்சாபில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K
VIDEO | Punjab: A man opened fire at Shiromani Akali Dal leader Sukhbir Singh Badal at the entrance of Golden Temple, Amritsar. The person was overpowered by people present on the spot. More details are awaited.#PunjabNews #SukhbirSinghBadal
— Press Trust of India (@PTI_News) December 4, 2024
(Full video available on PTI… pic.twitter.com/LC55kCV864